|
|
ஞாபகம் இருக்கா?
போன வரத்துலெ எங்களோட பாட்டி, விக்டோரியாங்க்றவங்க, செத்து போனாங்க. நெறைய பேருக்கு அவங்களெத் தெரிந்திருந்ததாலெ, அவங்களுக்கு நெறைய கூப்பிடு பெயர்கள் இருந்தது. பேரன் பேர்த்திக்கு அவங்க ஆபு! அவங்களோடெ நண்பர்களுக்கு அவங்கநினிதா! அவங்களோடெ மற்ற சொந்தக்காரர்களுக்கு அவங்க நினாங் விக்! நெறைய பேருக்கு அவங்களெப் பத்தி நெறைய ஞாபகம் இருக்கு.
என்னோடெ குடும்பத்திலெ, மூணு குழந்தெ இருக்காங்க: நானும், என்னோடெ அண்ணனும், தங்கையும். எங்களோடெ பால்யத்திலெ என்னெயும் என் தங்கையெயும் விட என் அண்ணனுக்குதான் பாட்டிக்கூட நெறைய பரிச்சயம் இருந்ததாலெ அவருக்குத்தான் பாட்டியெப் பத்தி நெறைய ஞாபகம் இருக்கு. என்னெ விட என் தங்கைக்கும் எங்க பாட்டியெப் பத்தி நெறைய ஞாபகம் இருக்கு ஏன்னா பாட்டி எங்க வீட்டிலெ தங்கியிருந்தபோ, அவளும் அவங்களும் ஒரே அறெலெ தூங்குவாங்க. அப்பொ, எங்க பாட்டி என் தங்கைக்குப் படுக்கெலெ அவங்களெப் பத்திய கதெயெ சொல்லிக்கிட்டிருப்பான்க்க. ஆனா, எனக்கு அந்த மதிரி அவங்களெப் பத்தி நெறைய ஞாபகம் இல்லெ. எனக்கு அவங்களெப் பத்தி வேறு மாதிரி ஞாபகம் இருக்கு. எந்த மாதிரி ஞாபகம்? என்னோடெ அண்ணனும் தங்கையும் பதினெட்டு வயதா இருந்தபோ, அவங்க கல்லூரிப் படிப்புக்கு மிச்சிகனுக்கு போனாங்க. நான் பிலடெல்பியாவுக்கு வந்தேந்-மிச்சிகனெ விட பிலடெல்பியா என்னோடெ ஊரிலிருந்து கொஞ்ச தூரம் அதிகம்.
அதனால், அவங்க பாட்டியெப் பாத்ததெ விட, நான்தான் எங்களோடெ வயது அதிகமா ஆகிக்கிட்டிருந்த பாட்டியெப் பார்த்துக்கிட்டிருந்தேன். இந்தக் காரணத்துக்கா, எனக்கு அவங்களோடெ கடெசி வருடங்களெப் பத்தித்தான் நெறைய ஞாபகம் இருந்தது. அந்த சமயம் அவங்களுக்கு ஒடம்பு சரியில்லெ.
அவங்களோடெ சாவுக்கா விருந்து நெறைய பேர் வந்து பாட்டியெப் பத்தி நெறைய கதெ சொல்லிக்கிட்டிருந்தாங்க. அதெ எல்லாம் கேட்க கேட்க பாட்டியெப் பத்திய என்னோடெ ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு வந்திட்டது.
அந்த வேறு வேறு கதெ கேட்டா, என்னோடெ பாட்டி--என் பால்யம் ஆபு, எல்லா ஆபுவுக்கு அன்பா இருந்த பேருமோடெ ஆபு—மனத்திலெ திரும்பி வருமோண்ணு நெனெத்தேன். ஏண்ணா நான் அவர்களெ மறக்க விரும்பல்லெ, நான் என் சொந்தக்காரர்களுக்கு ஆபுவெ பத்தி ஞாபகம் சொல்லுங்காளேண்ணேன். னாளா நாளா அவங்களெப் பத்திக் கேட்டு கேட்டு அவங்களெப் பத்திய எல்லா ஞாபகமும் எனக்கு வந்தது. இங்கே அவங்களெப் பத்தி ஒரு கதெ சொல்றேன்.
ஓரு வெயில்காலத்திலெ பாட்டி எங்களெப் பாத்தாங்க. தினமும் நாங்க மாஜொங்ங்ற விளெயாட்டு விளெயாடிக்கிட்டிருந்தோம். நாங்க விளெயாடின எல்லா தடவெயும் நான் தோற்றிட்டேன், எனக்கு கோபம் வாந்தது. என்னெ மகழ்ச்சி பட வைக்க, அவங்க என்கிட்டெ காதலிலெ யோகம் இருந்தா, விளெயாட்டிலெ யோகம் இருக்காது. ஆனா, காதலிலெ யோகம் இருக்காட்டா, விளெயாட்டிலெ யோகம் இருக்கும்ண்ணு சொன்னாங்க. என்னெப் பத்தி பேசினாலும், அவங்க தனெ பத்திதான் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்குக் காதலிலெ யோகம் இல்லெ ண்ணு நெனெந்தாங்க. அப்படி, அடிக்கடி, எனக்கு நெறைய காதலர்கள் இருந்தாங்க ண்ணு சொன்னாங்க. அவங்களுக்கு வேறு வேறு மதிரியான காதல் இருந்தது. பிளிபென்சிலெ, சின்னப் பெண்ணா இருந்தப்பொ அவங்களுக்கு கரே கிரன்ட் (அமெரிக்காவிலிருந்த னடிகர்)ங்க்றாவர்கூட கல்யாணத்தெப் பத்திக் கனவு வந்திருந்தது. அவங்களோடெ அறெயில் அவரோடெ படம் இருந்தது. அவங்களெ எல்லாருக்கும் பிடித்ததா எப்பொவும் அவங்க கூட கல்யணம் செய்யவேண்டி இருந்தது. அவங்களோடெ முதல் தோழன் அவங்களோடெ அண்ணணோடெ உலகத்திலெ அன்பான நண்பர். ரெண்டாம் உலகத்துப் போரில் அமெரிக்காக்கரார்கள் அண்ணனெ கொன்றிட்டாங்க. அப்புறம், நண்பர் ஆபு கூட கல்யாணம் செய்ய வேண்டி இருந்தாரு. ஆனா அவங்களோடெ அப்பாவும் அம்மாவும் இல்லெ, செய்யக்கூடது ண்ணு சொன்னாங்க. ஏன்னா நண்பரோடெ தங்கை காதல் கொள்கிறது விசுவாசமா இல்லெ ண்ணு அப்பாவும் அம்மாவும் நெனெத்தாங்க. சில வருடத்துக்குப் பிறகு அவங்க அவங்களோடெ முதல் கணவன் ரமோன் ங்க்றவரோடு சேர்ந்தாங்க. ஆனா, அவர் எப்பொவும் ரொம்ப கவலெப்பட்டுக் கிட்டிருந்ததாலெ, ஒரு நாள் அவர் காணாமெ போயிட்டாரு. அநேகமா அவர் தன்னெத் தானே கொன்றுகொண்டிருப்பார். ஆனா எங்க பாட்டிக்கு அவர் மறைந்ட்ததெப் பத்திய உண்மை இன்னும் தெரியவில்லெ.
கல்யாணம் செய்திருந்தாலும் அவங்க குத்தமத்த அடக்கமான பெண். அவங்களோடெ மாஸ்டர் படிப்புக்கா அவங்க மிச்சிகனிலெ ஒரு புல்பிரைட் வாங்கியிருந்தாங்க. மிச்சிகனிலெ தங்கிருந்தப்பொ, அவங்க ஒரு முதல் வருடத்து மாணவர் இருந்த வீட்டிலெ தங்கியிருந்தாங்க. எல்லாரும் பதினெட்டு வயதிலெ இருந்த பொண்ணு. அவங்களுக்கு பசங்களெல்லாம் இருந்தாங்க. அதெ யாரும் நம்பவில்லெ. அந்த சமயம், அமெரிக்காவிலெ, குளியல் அறெயில் பொண்ணு துணி உடுத்தாமெ, நடந்தாங்க. அதெப் பாட்டி எதிர்பாக்கவேயில்லெ! அந்த மதிரி எங்க பாட்டியாலெ முடியவிலெ. அவங்க எப்பொவும் உடம்பு பூரா துணி உடுத்திக்கிட்டிருந்ததாலெ, மற்ற பொண்ணு அவங்களெப் பாத்துச் சிரித்துக்கிட்டிருந்தாங்க. வழக்கம் போல, அவங்க துணி உடுத்தாத பொண்ணெப் பாத்து, அவங்களுக்கு வெட்கம் வந்தது. ஒரு நாள், அவங்க அவங்களோடெ நண்பர்களோடு கூடெப் பந்து விளெயாடுகிறதெப் பாக்கப் போனாங்க. அவங்க விளெயாட்டு மைதாணத்துக்குப் போன வேகத்திலெ திரும்பி வந்துவிட்டார்கள் ஏன்? எனால் அவங்களோடெ நண்பர் கால் தெரிய கால் சட்டைப் போட்டுக்கிர்ரு பந்து விளெயாடினாங்க. இது என் பாட்டிக்கு ரொம்ப வெட்கமாகப் போயிட்டது.
நெறைய பேருக்கு விக்தொரியவெப் பத்தி நெறைய ஞாபகம் இருக்கு. அவங்களோடெ வாழ்க்கெ மறுபகுதி எனக்கு மட்டும் தெரியும். ஆனா, அவங்களோடெ நண்பர்களுக்கும் சொந்தக்காரர்களுக்கும் என்னோடெ பாட்டி ஞாபகமும் அவங்களோடு வாழ்ந்துகிட்டே இருக்கும்.
|