Home
Overview
Technical Help

Select Unit > Unit 9: கொஞ்சம் இங்க வறீங்களா? > Lesson 1:   Spoken   No script   Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary   Conversations  Test

    

என்னெங்க கொஞ்சம் இங்க வறீங்களா?

கொஞ்சம் இரு! இதெ எழுதிட்டு வறேன்!

அட! இங்க வாங்க! வாங்கண்ணுக்கிட்டேயிருக்கேன்! நீங்கபாட்டுக்கும் கொஞ்சம் இரு! கொஞ்சம் இருண்ணுக்கிட்டேயிருக்கீங்களே!

இதெ எழுதி முடிச்சிட்டு வறேங்றேன். அதுக்குள்ள இப்பவே வா! இப்பவே வாண்ணுக்கிட்டேயிருக்கியே! அப்படி என்னதான் தலை போற விஷயம்ங்றேன்?

ஏங்க! இங்க கொஞ்சம் வாங்கங்றேனே! உங்களுக்குக் கேக்குதா இல்லியா?

கேக்குது! கேக்குது! நீங்க வாங்க! வாங்கங்றது நல்லாவே கேக்குது! ஏதாவது செய்யணும்னா! ஒடனே செஞ்சாதான் ஆச்சும்பியே நீ! அப்படி என்னதான் தலை போற வஷயம்ங்றேன்!

நீங்க! வறேன்! வறேம்பீங்க! ஆனா வரவேமாட்டீங்க! கொஞ்ச நேரம் இங்க வந்துட்டுதான் போங்களேங்றேன்! இதோ வறேன் இதோ வறேண்ணுகிட்டே இருக்கீங்களே தவிர! உட்கார்ந்த இடத்தெ விட்டு எழுந்து வறமாட்டேண்ணுக்கிட்டே இருக்கீங்களே!

என்ன செய்யணுங்கறதெ சொல்லித்தான் தொலையேன்! சும்மா! வாங்க! வாங்கண்ணுகிட்டேயிருப்பியே தவிர என்ன செய்யணுங்கறதெ சொல்லவே மாட்டியே! இப்ப என்னதான் செய்யணுங்றே நீ?

ஆமாம்! ஆமாம்! என்ன செய்யணுங்றதெ சொல்லிட்டா அப்படியே ஒண்ணு விடாம! டக்கு டக்குண்ணு செஞ்சிடுவீங்க பாருங்க! என்ன செய்யணுங்றதெ சொல்லணுமாம் சொல்லி!

    Grammar Notes:
    d
    Cultural Notes:

    Gossip

    Like in all the other cultures, gossip plays a major role in many aspects of the Tamil culture. Gossip is the major source for information dissemination and it is carried out in a very informal manner. This is true in the case of movie industry also.
© South Asia Language Resource Center (SALRC)