Home
Overview
Technical Help

Select Unit > Unit 6 > Reading 6: மனைவிReading in Written form  Reading 2  Exercise 5  Exercise 6

வீட்டெவிட்டுச் சென்ற கணவன்

வீட்டெ விட்டுச் சென்ற கணவன் பல நாள் வீடு திரும்பலெ. அவனுக்கு என்ன ஆனதொ ஏது ஆனதோண்ணு மனைவி மிகவும் வருத்ததுடன் காத்திருந்தா. யாராவது வீட்டோடெ கதவெத் தட்டினா அது தன்னோடெ கணவனாத் தான் இருக்கும்ணு ஓடிப் போய்க் கதவெத் தொறப்பா. அது அவளோடெ கணவன் இல்லெண்ணு தெரிஞ்சவொடன மிகவும் கவலெயோட திரும்புவா. தன்னெப் பார்க்கலெண்ணா தன்னோடெ மகனெ பாக்கவாவது அவன் வருவாண்ணு நெனெச்சிக் காத்திருந்தா. ஆனா அவன் வறதா தெரியலெ.

அடுத்தத் தெருவுலெ ஜன்னெலயே பாத்துக்கிட்டே உக்கார்ந்திருந்தா ஒரு பெண். தெருவுலெ ஏதாவது கொழந்தெ வெளெயாடினா ஓடிப் போய் அதோட வெளெயாடுவா அவ. தனக்குக் கொழ்ந்தெ இல்லெயேண்ணு அவளுக்கு ரொம்ப நாளா ஏக்கம். ஒரு நாள் தெருவுலெ ஒரு பையனெப் பாத்து அது தன்னோட காதலன் போலவே இருக்குதேண்ணு ஓடிப் போய் அவனெ வீட்டுக்கு அழெச்சிக்கிட்டு வந்தா. அவனோட அப்பா தன் காதலன்தாண்ணு புரிஞ்சிக்கிட்டா.

மறுநாள் பலநாளாக் காணாமெ போன கணவன் வீட்டுக்குத் திரும்பி வந்துட்டான். மனைவிக்கு ஒன்னும் புரியலெ. தன் கணவராவது வீட்டுக்கு திரும்பி வறதாவதுண்ணு நெனெச்சிக்கிட்டிருந்தவளுக்கு ஒரே மகிழ்ச்சி.

© South Asia Language Resource Center (SALRC)