|
|
ஞாபகம் இருக்கிறதா?
போன வரத்தில் எங்களுடைய பாட்டி, விக்டோரியா என்கிறவர்கள், செத்து போனார்கள். நிறைய பேருக்கு அவர்களைத் தெரிந்திருந்ததால், அவர்களுக்கு நிறைய கூப்பிடு பெயர்கள் இருந்தது. பேரன் பேர்த்திக்கு அவர்கள் ஆபு! அவர்களுடைய நண்பர்களுக்கு அவர்கள் நினிதா! அவர்களுடைய மற்ற சொந்தக்காரர்களுக்கு அவர்கள் நினாங் விக்! நிறைய பேருக்கு அவர்களைப் பற்றி நிறைய ஞாபகம் இருக்கிறது.
என்னுடைய குடும்பத்தில், மூன்று குழந்தைகள் இருக்கிறார்காள்: நானும், என்னுடைய அண்ணனும், தங்கையும். எங்களுடைய பால்யத்தில் என்னையும் என் தங்கையையும் விட என் அண்ணனுக்குதான் பாட்டிக்கூட நிறைய பரிச்சயம் இருந்ததால் அவருக்குத்தான் பாட்டியைப் பற்றி நிறைய ஞாபகம் இருக்கிறது. என்னை விட என் தங்கைக்கும் எங்கள் பாட்டியைப் பற்றி நிறைய ஞாபகம் இருக்கிறது ஏனென்றால் பாட்டி எங்கள் வீட்டில் தங்கியிருந்தபோது, அவளும் அவர்களும் ஒரே அறையில் தூங்குவார்கள். அப்பொழுது, எங்கள் பாட்டி என் தங்கைக்குப் படுக்கையில் அவர்களைப் பற்றிய கதையை சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால், எனக்கு அந்த மதிரி அவர்களைப் பற்றி நிறைய ஞாபகம் இல்லை. எனக்கு அவர்களைப் பற்றி வேறு மாதிரி ஞாபகம் இருக்கிறது. எந்த மாதிரி ஞாபகம்? என்னுடைய அண்ணனும் தங்கையும் பதினெட்டு வயதாக இருந்தபோது, அவர்கள் கல்லூரிப் படிப்புக்கு மிச்சிகனுக்கு போனார்கள். நான் பிலடெல்பியாவுக்கு வந்தேந்-மிச்சிகனை விட பிலடெல்பியா என்னுடைய ஊரிலிருந்து கொஞ்ச தூரம் அதிகம்.
அதனால், அவர்கள் பாட்டியைப் பார்த்ததை விட, நான்தான் எங்களுடைய வயது அதிகமாக ஆகிக்கொண்டிருந்த பாட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தக் காரணத்துக்காக, எனக்கு அவர்களுடைய கடைசி வருடங்களைப் பற்றித்தான் நிறைய ஞாபகம் இருந்தது. அந்த சமயம் அவர்களுக்கு உடம்பு சரியில்லை.
அவர்களுடைய சாவுக்காக விருந்து நிறைய பேர் வந்து பாட்டியைப் பற்றி நிறைய கதை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் கேட்க கேட்க பாட்டியைப் பற்றிய என்னுடைய ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு வந்துவிட்டது.
அந்த வேறு வேறு கதை கேட்டாள், என்னுடைய பாட்டி--என் பால்யம் ஆபு, எல்லா ஆபுவுக்கு அன்பாக இருந்த பேருமுடைய ஆபு—மனத்தில் திரும்பி வருமோ என்று நினைத்தேன். ஏன் என்றால் நான் அவர்களை மறக்க விரும்பவில்லை, நான் என் சொந்தக்காரர்களுக்கு ஆபுவை பற்றி ஞாபகம் சொல்லுங்காளேன் என்றேன். நாளாக நாளாக அவர்களைப் பற்றிக் கேட்டு கேட்டு அவர்களைப் பற்றிய எல்லா ஞாபகமும் எனக்கு வந்தது. இங்கே அவர்களைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன்.
ஓரு வெயில்காலத்தில் பாட்டி எங்களைப் பார்த்தார்கள். தினமும் நாங்கள் மாஜொஙென்கிற விளையாட்டு விளையாடிக்கொன்ண்டிருந்தோம். நாங்கள் விளையாடின எல்லா தடவையும் நான் தோற்றுவிட்டேன், எனக்கு கோபம் வாந்தது. என்னை மகழ்ச்சி பட வைக்க, அவர்கள் என்னிடம் காதலில் யோகம் இருந்தால், விளையாட்டில் யோகம் இருக்காது. ஆனால், காதலில் யோகம் இருக்காவிட்டால், விளையாட்டில் யோகம் இருக்கும் என்று சொன்னார்கள். என்னைப் பற்றி பேசினாலும், அவர்கள் தன்னை பற்றிதான் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் காதலில் யோகம் இல்லை என்று நினைந்தார்கள். அவ்வாறு, அடிக்கடி, எனக்கு நிறைய காதலர்கள் இருந்தார்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு வேறு வேறு மதிரியான காதல் இருந்தது. பிளிபென்சில், சின்னப் பெண்ணாக இருந்தப்பொது அவர்களுக்கு கரே கிரன்ட் (அமெரிக்காவிலிருந்த னடிகர்) என்கிறாவர்கூட கல்யாணத்தைப் பற்றிக் கனவு வந்திருந்தது. அவர்களுடைய அறையில் அவருடைய படம் இருந்தது. அவர்களை எல்லாருக்கும் பிடித்ததால் எப்பொழுதும் அவர்கள் கூட கல்யணம் செய்யவேண்டி இருந்தது. அவர்களுடைய முதல் தோழன் அவர்களுடைய அண்ணணுடைய உலகத்தில் அன்பான நண்பர். இரண்டாம் உலகத்துப் போரில் அமெரிக்காக்கரார்கள் அண்ணனை கொன்றுவிட்டார்கள். அப்புறம், நண்பர் ஆபு கூட கல்யாணம் செய்ய வேண்டி இருந்தார். ஆனால் அவர்களுடைய அப்பாவும் அம்மாவும் இல்லை, செய்யக்கூடது என்று சொன்னார்கள். ஏனென்றால் நண்பருடைய தங்கை காதல் கொள்கிறது விசுவாசமாக இல்லை என்று அப்பாவும் அம்மாவும் நினைத்தார்கள். சில வருடத்துக்குப் பிறகு அவர்கள் அவர்களுடைய முதல் கணவன் ரமோன் என்கிறவரோடு சேர்ந்தார்கள். ஆனால், அவர் எப்பொழுதும் ரொம்ப கவலைப்பட்டுக் கொண்டிருந்ததால், ஒரு நாள் அவர் காணாமல் போய்விட்டார். அநேகமாக அவர் தன்னைத் தானே கொன்றுகொண்டிருப்பார். ஆனால் எங்கள் பாட்டிக்கு அவர் மறைன்ட்ததைப் பற்றிய உண்மை இன்னும் தெரியவில்லை.
கல்யாணம் செய்திருந்தாலும் அவர்கள் குற்றமற்ற அடக்கமான பெண். அவர்களுடைய மாஸ்டர் படிப்புக்காக அவர்கள் மிச்சிகனில் ஒரு புல்பிரைட் வாங்கியிருந்தார்கள். மிச்சிகனில் தங்கிருந்தப்போது, அவர்கள் ஒரு முதல் வருடத்து மாணவர் இருந்த வீட்டில் தங்கியிருந்தார்கள். எல்லாரும் பதினெட்டு வயதில் இருந்த பெண்கள். அவர்களுக்கு பசங்களெல்லாம் இருந்தார்கள். அதை யாரும் நம்பவில்லை. அந்த சமயம், அமெரிக்காவில், குளியல் அறையில் பென்கள் துணி உடுத்தாமால், நடந்தார்கள். அதைப் பாட்டி எதிர்பார்க்கவேயில்லை! அந்த மதிரி எங்கள் பாட்டியால் முடியவில்லை. அவர்கள் எப்பொழுதும் உடம்பு பூரா துணி உடுத்திக்கொண்டிருந்ததால், மற்ற பெண்கள் அவர்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல, அவர்கள் துணி உடுத்தாத பெண்களைப் பார்த்து, அவர்களுக்கு வெட்கம் வந்தது. ஒரு நாள், அவர்கள் அவர்களுடைய நண்பர்களோடு கூடைப் பந்து விளையாடுகிறதைப் பார்க்கப் போனார்கள். அவர்கள் விளையாட்டு மைதாணத்துக்குப் போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார்கள்? ஏன் என்றால் அவர்களுடைய நண்பர்கள் கால் தெரிய கால் சட்டைப் போட்டுக்கொண்டு பந்து விளையாடினார்கள். இது என் பாட்டிக்கு ரொம்ப வெட்கமாகப் போய்விட்டது.
நிறைய பேருக்கு விக்தொரியவைப் பற்றி நிறைய ஞாபகம் இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையின் மறுபகுதிஎனக்கு மட்டும் தெரியும். ஆனால், அவர்களுடைய நண்பர்களுக்கும் சொந்தக்காரர்களுக்கும் என்னுடைய பாட்டியின் ஞாபகமும் அவர்களோடு வாழ்ந்துகொண்டே இருக்கும்.
|