|
வீட்டைவிட்டுச் சென்ற கணவன்
வீட்டை விட்டுச் சென்ற கணவன் பல நாள் வீடு திரும்பவில்லை. அவனுக்கு என்ன ஆனதோ ஏது ஆனதோ என்று மனைவி மிகவும் வருத்தத்துடன் காத்திருந்தாள். யாராவது வீட்டின் கதவைத் தட்டினால் அது தன்னுடைய கணவனாகத்தான் இருக்கும் என்று ஓடிப் போய்க் கதைவத் திறப்பாள். அது அவளுடைய கணவன் இல்லை என்று தெரிந்தவுடன் மிகவும் கவலையோடு திரும்புவாள். தன்னைப் பார்க்கவில்லை என்றாலும் தன்னுடைய மகனைப் பார்க்கவாவது அவன் வருவான் என்று நினைத்துக் காத்திருந்தாள். ஆனால் அவன் வருவதாகத் தெரியவில்லை.
அடுத்தத் தெருவில் ஜன்னலையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் ஒரு பெண். தெருவில் ஏதாவது குழந்தை விளையாடினால் ஓடிப் போய் அதனுடன் விளையாடுவாள் அவள். தனக்குக் குழந்தை இல்லையே என்று அவளுக்கு ரொம்ப நாளாக ஏக்கம். ஒரு நாள் தெருவில் ஒரு பையனைப் பார்த்து அது தன்னுடைய காதலன் போலவே இருக்கிறதே என்று ஓடிப் போய் அவனை வீட்டுக்கு அழைத்து வந்தாள். அவனுடைய அப்பா தன் காதலன்தான் என்று புரிந்துகொண்டாள்.
மறுநாள் பலநாட்களாகக் காணாமல் போன கணவன் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டான். மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. தன் கணவராவது வீட்டுக்குத் திரும்பி வருவதாவது என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரே மகிழ்ச்சி.
|