Home
Overview
Technical Help

Select Unit > Unit 4: நினைத்துக்கொண்டேயிருந்தேன் > Lesson 6:   Spoken   No transcript   Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary   Conversations  Test

    

A:ஹலோ!

Hello?

B:ஹலோ! நான் எழில் பேசுகிறேன். எப்படி இருக்கிறீர்கள்?

Hello! I am Ezhil speaking. How are you?

A:எழிலா? நான் நன்றாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்? இப்பொழுதுதான் நான் உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.

Ezhil? I am well. How are you? Now only I had been thinking about you!

B:சும்மா கதை விடாதீர்கள்! என்னை கூப்பிடுகிறேன் கூப்பிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டேயிருப்பீர்கள். ஆனால் கூப்பிட மாட்டீர்கள்.

Just don\#t make up stories! You are always saying you will call me, you will call me. But, you won\#t call!

A:ஒரே வேலை! அதையும் இதையும் செய்துகொண்டே இருக்கிறேன். நாள் போய்க்கொண்டே இருக்கிறது. அதுதான் உன்னை கூப்பிடவே முடியவில்லை. ஆனால் அடிக்கடி நான் உன்னை நினைத்துகொண்டேதான் இருப்பேன்.

So much work! I have been doing this and that. The days have been going on and on. (Because of) that only I haven\#t been able to call you. But I will always be thinking about you.

B:ஆமாம்! ஆமாம்! எனக்கும் அடிக்கடி விக்கல் வந்துகொண்டுதான் இருக்கிறது. நான் நினைத்துக்கொள்வேன் நீங்கள்தான் என்னை நினைக்கிறீர்களோ என்று.

Yes, yes! I am often having continuous hiccups! And I would think, are you only thinking (about me)?

A:வீட்டில் எல்லாரும் நன்றாக இருக்கிறார்களா? விமலா பள்ளிக்கூடத்துக்குப் போகிறாளா? இந்த! பக்கத்து வீட்டு மணி. அவனுக்கு வேலை கிடைத்துவிட்டதா?

Is everyone well at home? Is Vimala going to college? Has Mani next door gotten a job?

B:அவன் இப்பொழுது வேலைப் பார்க்கவில்லை. அவன் அப்பாவுக்கு விவசாயத்தில் உதவி பண்ணிகொண்டிருக்கிறான். ஆமாம்! உங்கள் எதிர்த்த வீட்டு கோபால் எப்படி இருக்கிறான்?

He isn\#t working now. He has been helping his father in agriculture. Oh! Yes! How is Gopal across your house?

A:கோபாலா? அவன் ரொம்ப நன்றாக இருக்கிறான். அவனுக்கு இப்பொழுது ஒரு பெரிய இடத்தில் வேலைக் கிடைத்திருக்கிறது. உன்னை அடிக்கடி கேட்பான்.

Gopal? He is very well. Now he has gotten a job in a very big place. He asks about you a lot.

B:அப்படியா? நானும் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.

Really? Tell him I also ask about him.

A: உம்ம். சொல்கிறேன். சரி. வேறு ஏதாவது விசேஷம் உண்டா?

Hmm. Okay. Is there any other special things?

B:ஒன்றும் விசேஷம் இல்லை. நீங்கள்தான் சொல்லவேண்டும்.

There isn\#t one thing. You only need to say.

A:ஒன்றும் பெரிய விசேஷம் இல்லை. சரி. அப்புறம் பேசலாமா?

There isn\#t one big thing (at all). Okay, shall we speak later?

B: பேசலாம்! (ங்க). நீங்களும் முடிந்தபோதெல்லாம் என்னைக் கூப்பிடுங்கள்.

We shall speak! You also call me whenever you can!

A:சரி. கூப்பிடுகிறேன். பார்க்கலாமா? போனை வைத்துவிடவா?

Okay, I will call. Shall we see? Shall we put down the phone?

B:சரி பார்க்கலாம். வைத்துவிடுங்கள். அப்புறம்! எல்லோரையும் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.

Okay, we will see. Put down the phone. Later! Tell everyone I asked about them!

    Grammar Notes:

    Reduplication (also see Unit 2 Cultural 2)

    Reduplication is a grammatical process where words and/or phrases are duplicated. Some of the reasons for reduplicating words are a) for emphasis or to express intensity, b) to express continuous action and c) to mark plurality in querying for a list of things.

    Reduplication of question words

    When question words are duplicated as in the following examples, the meaning of plurality, or of a list, in terms of location, time, and objects are understood. Usually, the reduplicated question words are translated into: 'wh- are all' (where are all, who are all, what are all, etc.) or 'wh-word all' (where all, who all, what all, etc.)

    Examples:

    1. நீங்க இந்தியாவுலெ எங்க எங்க போயிருக்கீங்க?

    What are all the places have you visited in India?

    2. யார் யார் உங்களோடெ நாளெக்கி சினிமா பாக்க வரப்போறாங்க?

    Who are all the people coming with you to see the movie tomorrow?

    3. அமெரிக்காவுலெ எந்த எந்த எடத்துக்கெல்லாம் போயிருக்கீங்க?

    Which are all the places have you visited in America?

    4. நேத்து கடையிலெ என்ன என்ன வாங்குனீங்க?

    What are all the things you bought from the store yesterday?

    5. நீங்க தெனமும் எப்ப எப்ப தமிழ் படிப்பீங்க?

    What are all the times you study Tamil daily?

    Reduplication of verbal participle forms

    Reduplication of verbal participle forms (AVP) usually gives the meaning of 'continuously' or 'regularly'.

    6. நான் தமிழெ படிச்சி படிச்சிப் பார்த்தேன், எனக்கு ஒன்னும் புரியலெ

    I attempted to study Tamil quite regularly, but I couldn't make out anything.

    7. என்னோடெ அப்பாக்கிட்டெ கார் வாங்கிக் கொடுங்கண்ணு கேட்டு கேட்டு பாத்துட்டேன் அவர் வாங்கித் தரவேயில்லெ!

    I kept asking my father to buy me a car, but he never did.

    8. எனக்கு இந்தியாவுக்குப் போய் போய் நெறெய பணம் செலவாயிட்டுது.

    I spent so much money going to India so often.

    Reduplication of modal forms

    Reduplication of modal forms with the emphatic ஏ added to the first modal gives the meaning of 'emphasis', 'stubborn' or being 'firm'.

    9. என்னோடெ அப்பா எனக்குக் கார் வாங்கித் தர மாட்டவே மாட்டேண்ணு சொல்லிட்டாங்க.

    My father stubbornly refused to buy me a car

    10. நான் என் அம்மாக்கிட்டெ கடெக்கிப் போக முடியவே முடியாதுண்ணு சொல்லிட்டேன்.

    I stubbornly refused my mother saying I would not go to the store

    11. நான் இனிமெ உங்க வீட்டுக்கு வரக் கூடவே கூடாதுண்ணு இருக்கேன்.

    I made it a firm point that I should not come to your house from now on.

    12. என்னதான் நான் வேண்டவே வேண்டாம்ணு சொல்லியும் என்னோடெ அப்பா எனக்குக் கார் வாங்கிக் கொடுத்துட்டாங்க.

    Even though I refused so firmly, my father bought me a car

    Echo-words:

    Echo words are reduplicated words where the second of two words is made by substituting the first syllable of the first word with 'ki' or 'kii'. Usually the echo constructions give a meaning of 'like something'.

    13. நாமெ ஹொட்டலுக்குப் போய் காப்பிக் கீப்பி குடிப்போமா?

    Shall we go to a restaurant and drink coffee or something?

    14. யாராவது ஜான் கீன் வந்தா நான் வீட்டுலெ இல்லேண்ணு சொல்லிடு!

    If John or anybody like John comes, tell him that I am not home

    15. நான் எதாவது புத்தகம் கித்தகம் படிச்சிக்கிட்டு இருக்கேன், நீங்க சீக்கிரம் கடைக்குப் போயிட்டு வந்துடுங்க.

    I will be waiting here reading some book or other, go to the store and return quickly.

    Such echoes aren't only restricted to the கி substitution, e.g., recall the reduplicated forms of Unit 2, Cultural Lesson 2: தடல் புடல் ('extravagant'), கடா முடா 'harsh', கறா முறா 'squeaking', and கசா முசா 'confused' or 'uneven.'

    Dialogue 1: Be careful! You might fall! http://www.thetamillanguage.com/unit_09/section_C/lesson01.asp

    Dialogue 2: If anyone called John or Keen comes by....! http://www.thetamillanguage.com/unit_09/section_C/lesson02.asp

    Cultural Notes:

    Secret Language Game

    When talking among adults without letting children know about it, adults tend to use a special code for which there exists no name in Tamil. By this method, the syllable க is added to every syllable in the word.

    Example:

    Ordinary Tamil: மிட்டாய் பையை பத்திரமா உள்ளெ வை 'keep the candy bag inside, safely'

    Secret code: கமி-கட்-கடா-கய் கபை-கயை கப-கத்-கதி-கர-கமா கவு-கள்-களே கவை

    நாளெக்கி சினிமாவுக்குப் போகலாம் 'we can go to the movies tomorrow'.

    Secret code: கனா-களெ-கக்-ககி கசி-கனி-கமா-கவு-கக்-ககு கபோ-கக-கலா-கம்.

    No strict rule is followed while making this type of secret code, and there may be some irregularities due to convenience. This language is used only casually among the adults for the purposes of talking around the children, and there are no other serious purpose of using this method is found in the language.

© South Asia Language Resource Center (SALRC)