|
கருமி
ஒரு ஊரில் ஒரு பணக்காரர். அவர் பெரிய கருமி. யாருக்கும் பணம் கொடுக்க மாட்டார். ஏழைகளுக்கு உதவ மாட்டார். எவர் எப்பவும் பழைய சட்டெதான் போடுவார். கிழிஞ்ச துண்டுதான் அவருடைய தோளில் இருக்கும். பழைய செருப்புதான் போடுவார். “உங்ககிட்ட நெறெய பணம் இருக்கு. ஆனா நீங்க ஏன் பழைய சட்டெயும் செருப்பும் போடுறீங்கண்ணு எல்லாரும் அவர்கிட்ட கேப்பாங்க. அதுக்கு அவர், “ நான் புது சட்டெயும் புது செருப்பும் போட்டா, எல்லாரும் என்கிட்ட பணம் கேப்பாங்க. உதவி செய்ய சொல்வாங்க. அதனால்தான் நான் பழெய சட்டெயெ போடுறேன்ண்ணு சொல்வார்.
ஒரு நாள் அந்த பணக்காரர் வெளியூருக்குப் போனார். அங்கயும் அவர் புதிய சட்டையும் புதிய செருப்பும் போடலெ. நீங்கதான் வெளியூருலெ இருக்கீங்களே. நீங்க ஏன் புதிய சட்டெ போடல்லெண்ணு கேட்டா அவர், “ நான் வெளியூருலெ இருக்கேன். இந்த ஊருலெ என்னெ யாருக்கும் தெரியாது. எனக்கு ஏன் புதிய சட்டைண்ணு கேப்பார்.
|