![]() |
||
| Home Grammar Lessons > Introduction I 1 2 3 4 5 6 II 1 2 3 4 5 6 III 1 2 3 4 5 6 IV 1 2 3 4 5 6 V 1 2 3 4 5 6 VI 1 2 3 4 5 6 Select Unit | ||
|
| ||
Temporal sentences in TamilA. Duration in a generic span of timePeriod of time taken to carry out any action is expressed without any specific suffix, but with a numeral adjective.1. நான் ஒரு வருடம் தமிழ் படித்தேன். ஒரு நாள் முழுவதும் (பூரா) மழை பெய்தது. 2. இந்தியாவுக்குப் போக இரண்டு நாட்கள் (days) ஆகும். B. Duration of an event with relevance to present time.1. நான் இரண்டு வருடமாகத் தமிழ் படித்துக்கொண்டிருக்கிறேன். 2. ஒரு வாரமாக மழை பெய்துகொண்டேயிருக்கிறது. 3. இரண்டு நாட்களாக நான் படிக்கவில்லை. C. Limitativea) Time within which particular action is carried out: Use the suffix குள் or இல் with temporal nouns.1. நான் ஒரு வருடத்துக்குள்/வருடத்தில் தமிழ் நன்றாகப்
படித்துவிடுவேன். 2. இன்னும் ஒரு வாரத்துக்குள் / வாரத்தில் என்னுடைய வேலைகள்
எல்லாம் முடிந்துவிடும். 3. நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் / நேரத்தில்
வந்துவிடுவேன். b) Doing an action soon after a particular time (இல்): 4. நான் ஒரு வாரத்தில் திரும்பி வந்துவிடுவேன். 5. நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் சாப்பிடப்போகிறேன். I will eat in an hour. D. Referring to the duration of an event (Specific time at which particular action is carried out.)1. எங்களுடைய வகுப்பு பத்து மணிக்கு முடியும். 2. நான் அடுத்த மாதம் வந்துவிடுவேன் (without a numeral
adjective!) 3. ரயில் காலையில் வரும். E. Use of Locative post positions முன்னால், பிறகு etc., to refer to a relative time.1. ஒரு மாதத்துக்கு முன்னால் நான் கலிபோர்னியாவுக்குப் போனேன். 2. இரண்டு நாட்களுக்குப் (days) பிறகு வருகிறேன். F. Source and goal (Starting point and end point of an action)1. காலையிலிருந்து சாயந்திரம் வரை (வரைக்கும்)
தூங்கினேன். 2. ஐந்து மணியிலிருந்து எட்டு மணி வரை (வரைக்கும்)
விளையாடினோம். G. Distributive (Referring to any recurring action in a regular interval of time)1. ஒரு மாதத்துக்கு ஒரு தடவைதான் சினிமா பார்க்கவேண்டும் என்று
என்னுடைய அப்பா என்னிடம் சொல்லிவிட்டார். 2. பத்து மணி நேரத்துக்கு மூன்று தடவை இந்த மருந்தைச்
சாப்பிடுங்கள். H. Relative clause + locative post positionsPast AJP + உடன்/உடனே refers to the time after something has happened. The suffix ஏ after உடன் emphasizes the time, which may be paraphrased in English as: as soon as/immediately something has happened.1. எனக்கு நல்ல பசி. நான் வீட்டுக்கு போன உடனே/உடன் சாப்பிட வேண்டும்.
AJP + போது/பொழுது refers to a time when something is happening.1. கார் ஓட்டுகிற(ஓட்டும்) போது நீங்கள் பாட்டு கேட்பீர்களா?
2. நேற்று நான் உங்கள் வீட்டுக்கு வந்த பொழுது நீங்கள் வீட்டில் இல்லை.
AJP + முன்னால் and பிறகு indicate the time before and after which some action is carried out. முன்னால் is only used with future AJP and பிறகு is used only with past AJP form of a verb. In spoken Tamil முன்னால் is used only with a verbal noun. 1. எல்லோரும் வரும் முன்னால் ("வறதுக்கு முன்னாலெ") நீங்கள் இங்கே
வந்துவிடவேண்டும்.
2. நான் வந்த பிறகு ("வந்தததுக்கு பெறகு/அப்புறம் - optionally used) நாம்
எல்லோரும் கோயிலுக்குப் போவோம்.
Regular EventsWhen an event is taking place reglarly by week, month and year (calendarical times) the nouns denoting these words are reduplicated with the first word taking the suffix ஆ replacing the ending அம் in வாரம் 'week', மாதம் 'month' and வருஷம் 'year'. 1. நாங்கள் வாராவாரம் தமிழ் படிப்போம் 'we study Tamil every week' 2. வீட்டுக்கு மாதாமாதம் வாடகை கட்டவேண்டும். 'we need to pay the rent for the house every month. 3. எங்கள் ஊரில் வருஷாவருஷம் கோவில் திருவிழா நடக்கும். 'Every year there will be a ritual ceremony in the temples in our village. This, however, can not made with non-calendarical times such as நிமிஷம் 'minute', வினாடி 'second' etc. These words take the word ஒவ்வொரு to express this meaning. 4. இப்பொழுதிலிருந்து ஒவ்வொரு நிமிஷமும் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்திரு. 'From now on sit and stand every minute' 5. ஒவ்வொரு மணி நேரத்திலும் தண்ணீர் குடிக்கவேண்டும். In every hour, you should drink water. Homework: Translate the following letter.Dear uncle, Well and wish to hear the same from you ( நலம் நலமறிய ஆவல்). You
didn't write a single letter to me for the past two months. You said that
you would write to me every week. I think that I will be able to graduate in
two years. I have been studying Tamil for the past one year. I study Tamil
everyday for one hour from eight to ten in the morning. It
took me one hour to write this letter. I think that I can write well next
year. Please write to me as soon as you receive this letter. I will write
another letter to you once I receive your letter. Also, from now
on please try to write to me atleast once in two months.
|
|
© South Asia Language Resource Center (SALRC) |